முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் கோலி

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

லண்டன்: சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய பேட்டர் விராட் கோலி முதலிடத்தை இழந்துள்ளார். நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

தொடர் நாயகன்....

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் 352 ரன்கள் குவித்து நியூசிலாந்தின் டேரில் மிட்செல் தொடர் நாயகன் விருதை வென்றார்.

795 புள்ளிகள்....

இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலியை (795 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளி மிட்செல் (845 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். இதேபோல், இந்திய வீரர் ரோஹித் சர்மாவும் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். 3-வது இடத்துக்கு ஆப்கானிஸ்தானில் இப்ராஹிம் சத்ரான் முன்னேறியுள்ளார். இந்திய வீரர்கள் ஷுப்மன் கில் 5-வது இடத்திலும், கே.எல். ராகுல் 10-வது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 11-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து