தேவசம் போர்டுக்கு ஐகோர்ட் கேள்வி

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      ஆன்மிகம்

 

திருவனந்தபுரம்,பிப்.21 - சபரிமலை கோயில் பகுதியை வியாபார தலமாக்குவது ஏன்?சபரிமலை கோயில் பகுதியை ஏன் வியாபார தலமாக்குகிறீர்கள் என்று தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. 

சபரிமலையில் கடந்த மாதம் 14 ம் தேதியன்று மகரஜோதி தினத்தன்று புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து நெரிசலை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. தேவசம்போர்டும் ஆலோசித்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில் கேரள மாநிலம் பந்தனம் திட்டாவை சேர்ந்த ராஜன் என்பவர் உட்பட 3 வியாபாரிகள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சபரிமலை கோயிலில் வரும் நவம்பர் 11 ம் தேதி வரை நீலிமலை சுவாமி ஐயப்பன் ரோட்டில் கடைகள் நடத்த தேவசம்போர்டுக்கு பணம் கட்டியுள்ளோம். ஆனால் இப்போது அங்கு கடைகள் நடத்த தேவசம்போர்டு மறுத்து வருகிறது. எனவே அனுமதி அளிக்குமாறு தேவசம்போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். 

இந்த மனுவை நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், சதீஷ் சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் வனப்பகுதியான சபரிமலையை வியாபார தலமாக்கும் முயற்சியை தேவசம்போர்டு கைவிட வேண்டும். எனவே அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: