முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா மீது விமான தாக்குதல் - இந்தியா வருத்தம்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.22 - லிபியா மீது அமெரிக்க தலைமையில் மேற்கத்திய நாடுகள் நடத்தும் விமான தாக்குதல் வருத்தமளிப்பதாக உள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ் இது குறித்து தனது டுவிட்டர் செய்தி மூலம் தெரிவித்திருப்பதாவது, லிபியாவில் வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது. இதனிடையே அந்நாட்டின் மீது நடத்தப்படும் விமான தாக்குதல் வருந்தத்தக்கது. அங்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பிரச்சினைகளை குறைக்கும் படியாக இருக்க வேண்டுமே தவிர அங்கு வாழ்ந்து வரும் அனைவருக்கும் இப்போது உள்ளதை விட இன்னும் மோசமான நிலையை உருவாக்குவதாக இருக்க கூடாது. 

லிபியா மீது நடத்தும் விமான தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர், தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட கூடாது. அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக் கூடாது. அனைத்து தரப்பினரும் வன்முறையை கைவிட வேண்டும். கருத்து வேறுபாடுகளை அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். ஐ.நா. மற்றும் பிராந்திய சர்வதேச அமைப்புகள் இதற்கு உதவ வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்