முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுண்டர் இதுதான்!

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.24 - தமிழ்நாட்டில் என்கவுண்டரில் ஒரே நேரத்தில் 5 பேர் கெல்லப்பட்டது இதுவே முதன் முறை ஆகும்.இதற்கு முன் பெங்களூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட சிவராசன் கோஷ்டியை சேர்ந்த 5 பேரை தமிழ்நாடு பேலீஸ் சுட்டுக் கென்றது. இதேபோல சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் நடந்த சண்டையிலும் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பெங்களூரில் தீவிரவாதி இமாம் அலி உள்பட 6 பேரை தமிழ்நாடு காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கென்றது.2006ல் ரவுடி பங்க்குமார்,  2007ல் ரவுடி வெள்ளை ரவி, தஞ்சையில் மணல் மேடுசங்கர், தாதா வீரமணி , 2009ல் தஞ்சையில் மிதுன் சக்கரவர்த்தி,மற்றும் ரவுடி சன்முகம் , ஆகியோரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  கடைசியாக 2010ஆம் ஆண்டு திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் nullநீலங்கரையில் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னையில் வெங்கடேச பண்ணையார் ஆகியோரும் சென்ற  ஆண்டு கோவையில் குழந்தைகளைக் கடத்திய மோகன்ராஜ்,பிப்ரவரி16ல்.மதுரையில் கல்மண்டையன் என்ற கவியரசு, பிப்ரவரி 17ல் சென்னை பனையூரில் திண்டுக்கல் பாண்டி,வேலு ஆகியோரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து,தமிழகத்தில் அதுவும் குறிப்பாக சென்னையில் நடந்துள்ள பெரிய என்கவுண்டர் இதுதான் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரை மணிநேரத்தில்..... வங்கி கொள்ளையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5பேரை போலீசார் என்கவுண்டரில் வேளச்சேரி அருகே அரை மணிநேரத்தில் சுட்டுக் கொன்றனர். கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 12.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர்.

பின்னர் கெள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல் நடத்தினர்.

நள்ளிரவு 12.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 1.00 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கெள்ளையர்களும் ரத்த வெள்ளத்தில் பிணமாககிடந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!