முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரிடம் காவல் துறை சார்பில் ரூ.6.47 கோடி நிதிஅளிப்பு

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 3 - தானே புயல் நிவாரணநிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் காவல் துறை சார்பில் ஒருநாள் ஊதியம் மொத்தம் 6.47 கோடி ரூபாயை உள்துறை முதன்மைச் செயலாளர் ராஜகோபால் மற்றும் டி.ஜி.பி ராமானுஜம் தலைமையிலான அதிகாரிகள் அளித்தனர்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம் நேற்று (2.3.2012) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர். ராஜகோபால்,  காவல்துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம், காவல்துறை தலைமை இயக்குநர் (பயிற்சி)  லதிகா சரண்,  சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரிபாதி,  ஆகியோர் காவல்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளமான 6 கோடியே 47 லட்சத்து 8 ஆயிரத்து 156 ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்கள். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 135 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரத்து  971  ரூபாயாகும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்