முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை: இந்தியா வங்கதேசதுடன் இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 16 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியி ல் இன்று நடக்க இருக்கும் 4 -வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதே ச அணிகள் மோத உள்ளன. வங்கதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக் கெட் போட்டி கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது விறு விறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தா ன் மற்றும் வங்காளதேசம் ஆகிய 4 நா டுகள் பங்கேற்று வருகின்றன. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். 

முன்னதாக நடந்த முதல் லீக் ஆட்டத்தி ல் பாகிஸ்தான் 21 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. பின்பு நடந்த 2 -வது லீக்கில் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. 

நேற்று 3 -வது லீக்கில் பாகிஸ்தான் மற் றும் இலங்கை அணிகள் மோதின. இன் று மிர்பூரில் நடக்க இருக்கும் 4 -வது லீக்கில் இந்தியா மற்றும் வங்கதேச  அணிகள் மோத இருக்கின்றன. 

இந்திய அணி தனது முதல் லீக்கில் இல ங்கை அணியை எளிதில் தோற்கடித்த து. எனவே இன்றைய லீக்கில் வங்கா ளதேச அணியை அதே போல தோற்க டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் காம்பீர், கோக்லி, கேப்டன் தோனி மற்றும் ரெய்னா ஆகி யோர் நல்ல பார்மில் உள்ளனர். இன்றைய போட்டியிலும் அவர்களது அதிரடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டெண்டுல்கர் இலங்கைக்கு எதிரான கடந்த போடடியில் 6 ரன்னில்ஆட்டம் இழந்தார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத் தை அளித்துள்ளது. 

உலக சாதனையாளரான டெண்டுல்கர் தனது 100- வது சதத்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது அவரது இயல்பான ஆட்டத்தை பாதித்துள்ளது.

சற்று பலவீனமான வங்கதேச அணிக்கு எதிராக சச்சின் தனது 100 -வது சதத்தை பூர்த்தி செய்வாரா? என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். 

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய பெளலர்களான இர்பான் பதான், வினய் குமார் மற்றும் அஸ்வின் ஆகி யோரது பந்து வீச்சு சிறப்பாக இருந்த து. அது இந்த ஆட்டத்திலும் தொடர வேண்டும்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை 23 ஒரு நாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் இந்தியா 21 வெ ற்றியையும், வங்கதேசம் 2 வெற்றியை யும் பெற்று உள்ளன. 

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக் கு இடையே மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய அரங்கத்தில் நடக்க இருக்கும் லீக் ஆட்டம் இந்திய நேரப்ப டி பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிற து. இந்தப் போட்டி தூர்தர்ஷன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்