அரசு நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

அருப்புக்கோட்டை, ஏப். 21 - அருப்புக்கோட்டை, சொங்கலிங்கபுரம் சுப்பாராஜ் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் நலத் திட்டங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.   மாவட்ட வருவாய் அலுவலர் ராமன் வரவேற்றுப் பேசினார்.   செய்தி மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 553 பேருக்கு சுமார் 27 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.  பேசியதாவது:

கடந்த 11 மாத கால அம்மா ஆட்சியில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு அரசின் நலதிட்டங்களை வழங்கி உள்ளது.  அம்மா அரசு தமிழகத்தில் ஏழையே இல்லை என்ற நிலையைக் கொண்டு வர அம்மா இரவு பகலாக பாடுபட்டு வருகின்றார்.  இன்று மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 3877 பேருக்கு சுமார் 27 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம்.   குழந்தைகளுக்கு காலணிகள், இலவச நோட்டுப் புத்தகம், கல்வி உதவித் தொகை யுனிைபாம், மடிக்கனினி என அனைத்து அரசு நலத்திட்டங்களையும் ஏழை எளிய பாட்டாளி மக்கள் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.  ஏழைகளின் படிப்பு பணத்திற்காக தடைபடக் கூடாது என்பதற்காகவே அம்மா அனைத்துத் திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.  தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 14500 கோடியை ஒதுக்கி உள்ளார்.  சட்டமன்றத்தில் அம்மா 110 விதியின்படி பேச ஆரம்பித்தால் கடைக்கோடி ஏழைக்கு ஏதோ உதவி செய்யப் போகிறார் என்றுதான் அர்த்தம்.  எம்.எல்.ஏ. அமைச்சர்கள் அம்மாவின் திட்டங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்றார்.  கூட்டத்தில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அருமைநாயகம் வரகுணராஜ் ஒன்றிய துணைச் சேர்மன்கள் கொப்பைய ராஜ் ராமமூர்த்தி, மூக்கையா கவுன்சிலர்கள் கண்ணன் பிரேமா மஞ்சுளா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: