முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுப்போட ஏழைகளுக்கு பணம் தரவேண்டும் என கோரும் மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 23 - ஓட்டுப்போட ஏழைகளுக்கு ரூ.100 தரவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. எந்தத் தேர்தலாக இருந்தாலும் அந்த தேர்தலில் ஓட்டுப்போட வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளுக்கு தலா ரூ. 100 அலவன்ஸ் வழங்க வேண்டும் என்று கோரி  டெல்லி ஐகோர்ட்டில் சி.ஏ.ராஜ்பால் சவுகான் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  ஓட்டுப்போடும் ஏழைகளுக்கு இந்த பணத்தை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும் என்றும் இதர வாக்காளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டார். இந்த மனு மீது டெல்லி ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதி ஏ.கே.சிக்கிரி, நீதிபதி ராஜீவ்சகாய் என்ட்லா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. ஓட்டுப்போடுபவர்களுக்கு இப்படி பணம் கொடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட சட்ட அடிப்படை எதுவுமே இல்லை. அதனால் இது தொடர்பாக இந்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். வேண்டுமானால் இது தொடர்பாக தேர்தல் கமிஷனை மனுதாரர் அணுகலாம் என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறினர். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப்போடுவதற்காக ஏழை மக்கள் தங்களுடைய வேலையை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. அல்லது லீவு போட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களது அன்றைய வருமானத்தை இழக்க நேரிடுகிறது. எனவே ஓட்டுப்போடும் ஏழைகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்கீழ் வழங்கப்படுவதைப்போல  தலா ரூ. 100 பணத்தை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்