முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் கோபால் மனு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஏப்.27 - சந்தன கடத்தல் வீரப்பனின் வரலாற்று, வனயுத்தம், என்ற பெயரில் படமாக நக்கீரன் எடுக்கப்பட்ட வெளியாக உள்ளது. இந்த படத்தில் நக்கீரன் கோபால் தன்னுடைய பாத்திரம் எப்படி சித்திரித்து இருக்கிறார்கள் என்பதை அறிய தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை நீதிமன்றம். சந்தன கடத்தல் வீரப்பனின்  வரலாற்றை ஏஎம்ஆர் ரமேஷ் என்பவர் தயாரித்து மிக விரைவில் வெளியிட உள்ளார் இந்நிலையில் கடந்த 2 வாரம் முன்பு நக்கீரன் கோபால்/ வீரப்பன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை எவ்வாறு சித்திரித்து உள்ளனர் என்பது எனக்கு தெரிய வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது.

கடந்த ஆட்சியின் போது கன்னட நடிகர் ராஜ்குமாரை பணையக் கைதியாக பிடித்து வைத்திருந்தபோது. அவரை காப்பாற்ற என்னை அரசுமுறை தூதராக நியமித்து காட்டிற்கு அனுப்பி வைத்தனர். நானும் காட்டிற்கு சென்று கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க உதவினேன், இப்பொழுது வீரப்பனின் வரலாற்றை படமாக எடுத்து வெளிவர உள்ள நிலையில் என்னை அந்த படத்தின் கதாபாத்திரத்தில் நல்ல முறையாக சித்திரித்துள்ளனரா அல்லது வேறுவகையாக சித்திரித்துயுள்ளனரா என்பதை அறிய எனக்கு படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன்பு காண்பிக்க வேண்டும் மேலும் நான் படத்தை பார்க்காமல் வெளியிடக்கூடாது என தெரிவித்திருந்தார். அதற்கு 17 ஆவது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதையெடுத்து படத்தின் தயாரிப்பாளர் நேற்று நக்கிரன் கோபால் தெரிவித்ததை போல 10 நாட்கள் முன்பு படத்தை காண்பிக்க தயாராக உள்ளோம் என்று உறுதியளித்தார்.இதனால் 17 ஆவது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நக்கிரன் கோபால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்