முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலு மனைவிக்கு எதிராக போட்டி வேட்பாளர்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 28 - சென்னை மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவுக்கு எதிராக வேட்பாளர் ஒருவர் களமிறங்கி உள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜெயந்தி தங்கபாலு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அக்கட்சியினர் தங்கபாலு வீடு முன்பு முற்றுகை, தீக்குளிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் வேட்பாளரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என தங்கபாலு கூறியிருந்தார்.  இந்த நிலையில் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவை எதிர்த்து போட்டி வேட்பாளராக அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர் சிவகாமி சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனால் தொகுதிக்கு தொடர்பே இல்லாத ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் நிச்சயம் தோல்வியடையும் என்றார். ஜெயந்தி தங்கபாலுவுக்கு மாற்று வேட்பாளராக அவரது கணவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவருமான கே.வி. தங்கபாலு 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்