முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப்பை கைது செய்ய பாகிஸ்தான் முடிவு

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,மார்ச்.29 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸை அணுகுமாறு அந்த நாட்டு தீவிரவாத தடுப்பு கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் பெனாசீர் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பெனாசீர் கணவர் ஜர்தாரி, அதிபராக பொறுப்பேற்றுள்ளார். முதலில் பதவி விலக மறுத்த முஷாரப்,பின்னர் பாகிஸ்தானை விட்டு தப்பியோடி தற்போது லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டியிருக்கிறார். பெனாசீர் படுகொலை வழக்கில் முஷாரப் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு கோர்ட்டு நடத்தி வருகிறது. விசாரணைக்கு வருமாறு முஷாரப்புக்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் மூலமாக 3 முறை அனுப்பப்பட்டது. ஆனால் முஷாரப்பிடம் அந்த சம்மனை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் வழங்கவில்லை. அதனால் முஷராப்பை கைது செய்ய சர்வதேச போலீசாரை அணுகுமாறு பாகிஸ்தானின் முக்கிய புலனாய்வு அமைப்புக்கு தீவிரவாத தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்