முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமதாசுக்கு விஜயகாந்த் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கும்மிடிப்பூண்டி, மார்ச்.29 - கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஊத்துக்கோட்டை அண்ணா சிலை மற்றும் கும்மிடிப்பூண்டி ஜி.எஸ்.டி. சாலை அருகே நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது, 

பா.ம.கவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கினார்கள். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர். 

மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என கொள்கை வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர். குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி உள்ளனர். ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கொடுத்து விட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி விட்டனர். 

பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படியும் மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணம் கொண்ட பா.ம.க.வினர் கும்மிடிப்பூண்டியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்