எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						
	சென்னை, மே.24 - டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம் என்றும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், மக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 423 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
	இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
	கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
	கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, டெங்கு காய்ச்சலை உடனடியாக   முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று (23.5.2012) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் காய்ச்சலுக்கு காரணமான வைரஸை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகக் குழுவினர், டெங்கு வைரஸ் வகை1 மற்றும் டெங்கு வைரஸ் வகை3 ஆகியவற்றால் இந்த  காய்ச்சல் திடீரென ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்தனர். இதன் அடிப்படையில், எனது உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எனது உத்தரவின் பேரில், 17.5.2012 அன்று  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் திருநெல்வேலி சென்று இது குறித்து கடையநல்லூர், தென்காசி நகராட்சிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். இந்தக் காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அமைச்சர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ததுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 18.5.2012லிருந்து ஒரு வட்டாரத்திற்கு இரண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம்கள் வீதம், 38 விழிப்புணர்வு முகாம்கள் நாள்தோறும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன என்று ஆய்வு செய்தார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கூடுதலாக இரண்டு குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஒரு வட்டாரத்திற்கு ஒரு nullச்சியியல் வல்லுநரும், மூன்று வட்டாரங்களுக்கு ஒரு மூத்த nullச்சியியல் வல்லுநரும் நியமிக்கப்பட்டு கொசு தடுப்புப் பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைமை nullச்சியியல் வல்லுநர் தலைமையில், 25 nullச்சியியல் வல்லுநர்கள் இதற்கான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  ஒரு வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ அலுவலரும், ஒரு நகராட்சிக்கு ஒரு மருத்துவ அலுவலரும் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரத்திலும், நோய் கண்டறியும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மேலும், இரண்டு துணை இயக்குநர்கள் மற்றும் மூன்று சுகாதார அலுவலர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கென கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். நோய் தடுப்புப் பணிகளுக்கென்று 29 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதையும், அதனைக் கட்டுப்படுத்துவதையும், நோய் தாக்கியவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ வசதிகள் அளிப்பதையும் கண்காணிப்பதற்காக எனது உத்தரவின் பேரில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.  சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர், மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு, தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து இரண்டு நிபுணர்கள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் திருநெல்வேலியில் முகாமிட்டு அங்குள்ள மருத்துவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 16.5.2012லிருந்து ஒரு வட்டாரத்திற்கு 70 தற்காலிக பணியாளர்கள் வீதம் தினக்கூலி அடிப்படையில், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 1,330 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் கொசுப் புழு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் காரணமாக டெங்கு காய்ச்சல் அண்டை மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களுக்கு பரவுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,466 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில், 817 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.  இதில் 423 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மீதமுள்ளோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  நேற்று (23.5.2012) எனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
	டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக புகை மருந்து அடிக்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்.
	பொதுமக்களுக்கு இந்த நோய் பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 50 வண்டிகள் மூலம் தெரு முனைப் பிரச்சாரமும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரங்களும்  மேற்கொள்ளப்படும்.
	திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவக்குழு மூலமாக காலையிலும், மாலையிலும் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.  
	திருநெல்வேலி மற்றும் தென்காசி மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக தனி வார்டுகள் அமைக்கப்படும்.  இதற்காக சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் அனுப்பப்படுவர்.
	திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் கடையநல்லூர் போன்ற டெங்கு காய்ச்சல் உள்ள இடங்களில் பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைப்பதற்கான தேவையை குறைக்கும் வகையில் தினந்தோறும் குடிநீnullர் வழங்கப்படும்.
	தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவர்.
	மற்ற மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாகக் கண்காணிக்கவும், டெங்கு காய்ச்சல் ஏற்படாத வண்ணம் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையையும் தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களும்,  மாவட்ட மருத்துவ அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
	இந்த டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை ப்ளீச்சிங் பவுடர் அல்லது சாம்பல் கொண்டு நன்கு கழுவ வேண்டும் என்றும், எந்தக் காய்ச்சல் ஏற்பட்டாலும், உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அல்லது மருத்துவ முகாமிற்கோ சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.  
	இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு 
-   
          வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி. 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
-   
          பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது. 
-   
          கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது. 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 
-   
          சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
-   
          வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார். 
-   
          தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய 
-   
          திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. 
-   
          விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். 
-   
          தங்கம் விலை உயர்வு30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது. 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். 
-   
          நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு30 Oct 2025மதுரை, நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அ.தி.மு.க. 
-   
          பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
-   
          பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்30 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை 
-   
          33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
-   
          சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் யாதவ் நியமனம்30 Oct 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 






















































