முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் படுகொலைகளில் அச்சுதானந்தனுக்கு தொடர்பு

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்லம், ஜுன் 8 - இடுக்கியில் நடந்த அரசியல் படுகொலைகளில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு தொடர்பு இருக்கிறது என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி துவங்கிய சந்திரசேகரன் கடந்த மாதம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஒற்றப்பாலம் நகரில் செய்தியாளர்களிம் பேசும்போது, தங்களுக்கு பிடிக்காதவர்களை கொலை செய்வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வாடிக்கை. சந்திரசேகரன் கொல்லப்பட்டபோது அவரது கொலைக்கும் தங்களது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சி தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த கொலையில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் நடந்த அரசியல் படுகொலைகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொடர்பு உண்டு. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மணி வெளிப்படையாகவே கூறிவிட்டார். மணி கூறியுள்ள அரசியல் கொலைகள் நடைபெற்றபோது அச்சுதானந்தன் தான் கட்சித் தலைவராக இருந்தார். எனவே அவருக்கு தெரியாமல் இக்கொலைகள் நடந்திருக்காது. எனவே இந்த கொலைகளில் அச்சுதானந்தனுக்கும் தொடர்பு உண்டு என்று ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்