முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தா மாற்றமா? மதுரை ஆதீனம் பேட்டி

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.15 - மதுரை இளைய ஆதீனம் நித்தியானந்தா மாற்றப்படுவாரா என்ற கேள்விக்கு மதுரை ஆதீனம் பதிலளித்தார்.   மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பின. பல்வேறு அமைப்புக்கள் மதுரை ஆதீனமடத்தை எதிர்த்து போராட்டம் நடத்தின. பல்வேறு சங்கராச்சாரியார்களும் நித்தியானந்தா நியமனத்தை ஏற்க மறுத்து கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதற்கு பதலளித்த மதுரை ஆதீனம் மற்றும் நித்தியானந்தா ஆகியோர் எதிர்ப்புகளை சட்டப்படி சமாளிப்போம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் நித்தியானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் பெங்களுரில் உள்ள ஒரு டிவிக்கு அளித்த பேட்டியில் நித்தியானந்தா 40க்கும் மேற்பட்ட தடவை என்னுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டார் என்று தெரிவித்தார். இந்த பிரச்சினை பெரும் பூகம்பமாக வெடித்தது. இதற்கு பதிலளிப்பதற்காக நித்தியானந்தா பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நிருபர்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நித்தியானந்தா சீடர்களை விட்டு அவரை தாக்க உத்தரவிட்டார். இந்த தாக்குதலில் அந்த நிருபர்காயம் அடைந்தார்.

   இதை தொடர்ந்து நித்தியானந்தாவை போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில் நித்தியானந்தா பெங்களூர் ராம்நகர் கோர்ட்டில் சரண் அடைந்தார். தொடர்ந்து நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில் அவர் தொடர்ந்து மதுரை இளைய ஆதீனமாக நீடிப்பாரா  என்று கேட்டதற்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியதாவது, நித்தியானந்தா நியமனத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவை வைத்து புகார் கூறப்பட்டது. அதில் இருந்து அவர் மீண்டு வந்தார். அதே போல் இந்த புகாரில் இருந்தும் மீண்டு  வருவார். ஆதீனமடத்தில் பூஜைகள் வழக்கம் போல் நடக்கின்றன. நித்தியானந்தாவின் சீடர்கள் ஆன்மீக பணியில் வழக்கம் போல் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago