முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50 சிறார்கள்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பெங்களூர், ஜூன். 15  - நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்திய அதிகாரிகளும், போலீஸாரும் அங்குள்ள அறை ஒன்றில் 50 சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் யார், எதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நித்தியாந்தாவின் பிடதி ஆசிரமம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் பல அறைகளைப் பூட்டி சீல் வைத்து விட்டனர். அங்கு நடந்த சோதனையின்போது கஞ்சா பொட்டலங்கள், ஆணுறைகள், மது பாட்டில்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் என்ற பெயரில் கஞ்சாவைக் கலந்து கொடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. அதை நிரூபிப்பது போல கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளன.

சில அறையில் வில், அம்பு, திரிசூலம், 5 அடி உயர சாமிசிலைகள், பஞ்சலோக பொருட்கள் இருந்தது. ஆசிரமத்தில் 3 கார்கள் நின்றது. அதன்மூலம் பணம், நகைகள் உள்பட சில பொருட்களை கடத்த முயற்சி நடந்ததாகவும் போலீசாரால் அது தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. போலீசார் ஆசிரமத்தில் நுழைந்தபோது 200 பக்தர்கள் உள்ளே இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து சில சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. 

மேலும் ஒரு ரகசிய அறையில் 50 சிறுவர், சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அனைவருக்கும் 8 முதல் 15 வயதே இருக்கும். அவர்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் நித்தியானந்தாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ ஈ்டுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இதுகுறித்து தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் இருந்த அத்தன பேரிடமும் விசாரணை நடத்திய போலீசார் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்