எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜாகர்தா, ஜுன் - 18 - இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை மூன்றாவது முறையாக பெற்று சாதித்திருக்கிறார். இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போட்டிகளில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடினர். இந்த போட்டித் தொடரில் இந்தியா ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு தேர்வு பெற்றுள்ள இந்திய வீரர்கள் காஷ்யப் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் ஆரம்பம் முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதி போட்டியை எட்டினர். ஆனால் காஷ்யப் அரை இறுதி போட்டியில் இந்தோனேஷிய வீரரிடம் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறினார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாய்னா நேவால் அரை இறுதியில் கொரிய வீராங்கனையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 4 வது முறையாக தகுதி பெற்றார் சாய்னா. இறுதிப் போட்டியில் சாய்னா சீனாவின் ஜியூரூய் லீயை சந்தித்தார். உலகத் தரவரிசையில் 4 ம் இடத்தில் இருக்கும் லீ, ஏற்கனவே சாய்னாவுடன் மோதிய 4 போட்டிகளில் 3 இல் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான லீ தனது அதிரடி துவக்கத்தின் மூலம் முதல் செட்டில் சாய்னாவை எளிதில் வீழ்த்தினார். இரண்டாவது கேமில் எழுச்சி கண்ட சாய்னா கடும் போராட்டத்திற்குப்பின் அந்த கேமை 22 - 20 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3 வது கேமை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்த போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த கேமில் லீ பல ரிட்டர்ன் ஷாட்களை நெட்டில் அடித்ததால் பாயிண்ட்களை இழந்தார். இதை பயன்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்ட நேவால் 21 - 19 என்ற கணக்கில் மூன்றாவது கேமை வென்று பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இவர் இங்கு பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இத் தொடரில் 2 ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து ஓபன் போட்டியில் பட்டம் வென்ற சாய்னா நேவால், சில தினங்களுக்கு உள்ளாகவே இந்த போட்டியில் வென்றுள்ளார். இது இவர் இந்த ஆண்டில் வெல்லும் 3 வது பட்டமாகும். ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் சாய்னாவின் இந்த எழுச்சி இந்திய பேட்மிண்டன் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி குறித்து சாய்னா கூறுகையில், இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை சீன வீராங்கனைகள் அனைவருமே கடுமையான சவாலைத் தரக்கூடியவர்கள் என்றார். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எனக்காக ஆரவார குரல் கொடுத்தது எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது என்றார்.
தோல்வியடைந்த லீ கூறுகையில், நான் பலமுறை வெற்றிக்கு மிக அருகில் வந்து அதை கோட்டைவிட்டேன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஆடியதால் பல பாயிண்ட்களை இழக்க நேரிட்டது. ஆனால் நேவால் அதனை பயன்படுத்திக்கொண்டார் என்றார்.
இப்போட்டித் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தோனேஷியாவின் சைமன் சந்தோசோ, சீனாவின் டு பென்கியோவை 21 - 18, 13 - 21, 21 - 11 என்ற கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
13-வது மகளிர் உலகக்கோப்பை: இந்தியா-தெ.ஆப்பிரிக்கா அணிகள் : இன்று இறுதி போட்டியில் மோதல்
01 Nov 2025மும்பை : 13-வது மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் தங்களது முதலாவது உலகக்கோப்பைக்காக இந்தியா- தென் ஆப
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
01 Nov 2025வெலிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.
-
உலகின் மிகப்பெரிய மியூசியம் எகிப்தில் திறப்பு
01 Nov 2025கெய்ரோ : உலகின் மிகப்பெரிய மியூசியம் எகிப்தில் திறக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.


