முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணத்திற்கு வாக்களிக்க மாட்டோம் என மாணவர்கள் சபதமேற்க வேண்டும்-

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோபால்சாமிமதுரை,மார்ச்.- 31 - பணத்துக்காக வாக்களிக்க மாட்டோம் என்று மாணவர்கள் சபதமேற்க வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி வலியுறுத்தினார். மதுரை கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது, 

கல்வி என்பது வெறும் தகவல் பெறுவது மட்டுமல்ல. வாழ்விற்கான பயிற்சியும் ஆகும். சமீபத்தில் வெளியான ஊழல்களால் அரசு நடவடிக்கைகள் அடியோடு ஊழல் மயமாகி விட்டதோ என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் ஊழலுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ பேர் அரசு துறைகளில் இருக்கின்றனர். இருந்த போதிலும் சமீப கால நிகழ்வுகள் அச்சத்தை தருகிறது. ஒட்டுமொத்தமாக விலை கொடுத்து மக்களை வாங்க முற்படும் ஆபத்தான நிகழ்வுதான் அது. மிகவும் வெட்கக்கேடான இந்த செயல் தமிழ்நாட்டில் அதிகளவில் திகழ்கிறது. விக்கிலீக்ஸ் மூலம் தமிழ்நாட்டின் இந்த போக்கு உலகளவில் பேசப்படுகிறது. காசுக்காக வாக்கை விற்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டனர். மாணவர்கள் பணத்துக்காக வாக்களிக்க மாட்டோம் என ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். 

வேட்பாளர் ஒருவர் உங்களுக்கு பணம் தருவதும் அப்படித்தான். அவர்கள் வரிப் பணத்தை திருடுகின்றனர். அது உங்களுடைய பணம் அதில் நாய்க்கு வீசும் பிஸ்கட் போல் உங்களுக்கும் தருகின்றனர். இது ஒருவரது சுயமரியாதை மீதான கடுமையான தாக்குதல். இந்த போக்கை அடியோடு தடுத்து நிறுத்தி வெற்றி பெறுவதன்மூலம் தான் தமிழகம் பெருமைமிகு கலாசாரம் கொண்டது என்று சொல்லிக் கொள்ள முடியும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்