முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் போர்க்கொடி தூக்குகிறார் எடியூரப்பா

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூன். - 20 - கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை மாற்றி விட்டு புதிய முதல்வரை 3 நாட்களில் நியமிக்க வேண்டும் என்று எடியூரப்பா போர்க்கொடி தூக்கி உள்ளார்.  தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும்தான் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அங்கும் உட்கட்சி குழப்பங்களால் அதை பறிகொடுக்கும் அவல நிலையில் அக்கட்சி உள்ளது. ஊழல் வழக்குகளில் சிக்கிய எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சதானந்தகவுடா புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் அவரை பதவியை விட்டு இறக்க எடியூரப்பா காய்களை நகர்த்தி வருகிறார்.  கர்நாடக சட்டசபையின் வைர விழா நேற்று முன்தினம் தொடங்கியது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா, முன்னாள் சபாநாயகர் சந்திரேகவுடர், கவர்னர் பரத்வாஜ் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்புரையாற்றினர். முதல் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 5 பேர் கவுரவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  முதல்வர் பதவியில் இருந்து சதானந்தாவை நீக்கி விட்டு ஊரக வளர்ச்சி துறை மந்திரியாக இருக்கும் ஜெகதீஷ் ஷட்டாரை அந்த பதவியில் அமர வைக்கும் குறிக்கோளுடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. சதானந்தாவிற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் அவரை நீக்கி விட்டு ஜெகதீஷ் ஷட்டாரை புதிய முதல்வராக நியமிக்க வேண்டும். 3 நாட்களில் சதானந்தா மாற்றப்பட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது குறித்து டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து வலியுறுத்தவும் உள்ளனர். புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறும் என்று அவர்கள் உறுதிபட தெரிவித்தனர். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்