முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 தென் ஆப்பிரிக்கா 39 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே,  ஜூன். - 21 - வங்கதேச அணிக்கு  எதிராக ஹரராரே நகரில் நடைபெற்ற டி - 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தரப்பில் துவக்க வீரராக இறங்கிய அம்லா அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். அவருக்கு பக்கபலமாக லெவி, இங்க்ராம், மார்கெல், டுமினி ஆகி

யோர் ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, பீட்டர்சன் மற்றும் லாங்கே இருவரும் நன்கு பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக சாட்சோபே, மற்றும் மார்கெல் ஆகியோர் பந்து வீசினர். தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 20-க்கு 20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் பில் நேற்று பகலிரவுஆட்டமாக நடந்தது. இதில் டாசில் வெற்றி பெற்ற  தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்னை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அம்

லா 53 பந்தில் 88 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, லெவி 37 ரன்னையும், 

இங்க்ராம் 29 ரன்னையும், மார்கெல் 22 ரன்னையும், டுமினி 23 ரன்னையும் எடுத்தனர். வங்கதேச அணி சார்பில், முன்னணி வீரரான மொர்டஜா 44 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஜியா உர் ரஹ்மான் 28 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

வங்கதேச அணி 210 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்னை எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி இந்தப் போட்டியில் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. வங்கதேச அணி தரப்பில், கேப்டன் முஸ்பிகர் ரகீம் 32 பந்தில் 50 ரன்?னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, மக்மதுல்லா 34 ரன்னையும், மொகமது அஸ்ரப்புல் 33 ரன்னையும், ஜகுருல் இஸ்லாம் மற்றும் ஜியா உர் ரஹ்மான் தலா 12 ரன்னையும் எடுத்தனர். 

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில், பீட்டர்சன் 16 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். லாங்கே 33 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, சாட்சோபே மற்றும் மார்கெல் இருவ

ரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அம்லா தேர்வு செய்யப்பட்டார். 

-------------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்