மோடி பங்கேற்கும் மாநாட்டு நிர்வாகிக்கு மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

மதுரை, ஜூலை. - 2 - குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ள நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிரா சமூகத்தினர் சார்பில் வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மாநாட்டு நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். எனவே மாநாடு தொடர்பான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வரும் வேளையில் நிர்வாகி ராமதாசுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: