எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை.- 2 - பிரதமராக சோனியா காந்தியை பதவியேற்பு செய்து வைக்க தாம் தயாராக இருந்ததாக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் தமது புத்தகத்தில் எழுதியிருப்பதை குறித்து ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் விமர்சித்துள்ளார். முன்னாள் குடிரசு தலைவர் அப்துல் கலாம் எழுதியுள்ள டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புத்தகத்தில் 2004-ம் ஆண்டு சோனியா பிரதமராக பதவியேற்க பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு பதவியேற்பு செய்து வைக்க தாம் தயாராக இருந்தேன் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். இதனை விமர்சித்துள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், 8 ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த அப்துல் கலாம் தற்போது இப்படி பேசியிருப்பது சுயநலத்தை அதிகரித்துக் கொள்ளத்தான் என்று கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் பதவி போன்ற பெரிய பொறுப்புகளில் இருப்பவர் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதுவரை கலாம் மீது இருந்த மரியாதை போய்விட்டது என்று சரத் யாதவ் தெரிவித்துள்ளார். வருகின்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு, சரத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இக்கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


