புதுடெல்லி,ஜூலை.- 2 - தூக்குத்தண்டனை பெற்றுள்ள கைதிகளின் வழக்கை அவர்களது சமூக-பொருளாதார நிலை அடிப்படையில் பரிசீலனை செய்ய நினைத்தேன் என்று முன்னாள ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். அவர் திருப்புமுனை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. அந்த புத்தகத்தில் உள்ள சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்தியை பிரதமராக்க விரும்பினேன் என்றும் அப்துல்கலாம் கூறியுள்ளார். என்னை சந்தித்த சோனியா காந்தியை உடனடியாக பதவி ஏற்பு விழாவை வைத்துவிடலாமே என்றேன். காலதாமதப்படுத்திய சோனியா காந்தி மீண்டும் என்னை சந்தித்தபோது மன்மோகன் சிங்கை பிரதமராக்கலாம் என்று சோனியா கூறிவிட்டார் என்றும் அந்த புத்தகத்தில் சோனியா காந்தி கூறியுள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது அந்த புத்தகத்தில் இருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. தூக்குத்தண்டனை கைதிகள் வழக்குகளை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பரிசீனை செய்ய நினைத்தேன் என்றும் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். தீவிரவாதிகள் அப்சல் குரு மற்றும் அஜ்மல் கசாப் ஆகியோர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு பக்கம் கோரிக்கை எழுந்தள்ள நிலையில் அப்துல் கலாம் எழுதிள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதனால் அந்த திருப்புமுனை என்ற புத்தகம் மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. தூக்குத்தண்டனை பெற்றுள்ள கைதிகள் கருணை மனுக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளனர். இவைகள் மிகவும் சிக்கலானவைகளாகும். இந்த கருணை மனுக்கல் குறித்து ஜனாதிபதியாக இருப்பவர் எவ்வரும் மகிழ்ச்சி அடையமாட்டார்கள். நான் ஜனாதிபதியாக இருக்கும்போது இந்த கருணை மனுக்களை குற்றத்தின் அடிப்படை, குற்றத்தின் தன்மை, அந்த குற்றங்களை செய்தவர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்து அடிப்படையில் பரிசீலனை செய்யலாம் என்று நினைத்தேன் என்றும் கலாம் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். தூக்குத்தண்டனை கைதிகளின் வழக்கை ஆய்வு செய்தபோது அவைகள் அனைத்தும் சமூக-பொருளாதார தொடர்பு உடையதாக இருப்பது தெரியவந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இந்த குற்றங்கள் எல்லாம் ஒரு சாதாரண விறுப்பு,விரோதம் ஆகியவைகளால் நடந்திருப்பதோடு அந்த குற்றங்களை செய்ய வேண்டும் என்ற நோக்கம் அதில் இல்லை என்பதும் தெரியவந்தது என்றும் கலாம் மேலும் கூறியுள்ளார்.
- குன்றக்குடி வெள்ளி ரதம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி.
- திருவிடைமருதூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு. இரவு சுவாமி அம்பாள் ரிஷப சேவை தெப்பம்.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்.