முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக நன்மை வேண்டி பழனி முருகனுக்கு அன்னாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, ஜூலை. - 3 null- பழனி மலையில் உலக நன்மை வேண்டி முருகனுக்கு அன்னாபிஷேகம் உச்சிகால பூஜையில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று காலை பழனி மலை முருகன் சன்னிதானத்தின் முன் பாரவேல் மண்டபத்தில் சேவற்கொடிகம்பம் முன் தங்க சப்பரத்தில் புனித நீர் நிரப்பப்பட்ட மூன்று கலசங்களும் 108 வலம்புரி சங்குகளும் செப்பு தட்டில் வைத்து 1008 மூலிகைகளால் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.  20 க்கும் மேற்பட்ட சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாட மங்கள இசை முழங்க யாகங்கள் நடைபெற்ற போது பக்தர்கள் அரகோகரா கோஷமிட்டு வணங்கினர். பின்னர் ஒரு மணியளவில் பழனி மலை முருகனுக்கு 16 வகை அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. நவபாஷான சிலை முருகனுக்கு தலையில் மஞ்சள் அன்னத்தால் கிரீடமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. வருடத்தில் ஒருநாள் ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் முருகனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்து வழிபட்டு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்கள் அருந்தினால் மனப்பிணி, உடற்பிணி குணமாகும் என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சியில் சித்தனாதன்சன்ஸ் எஸ்.வி. சிவநேசன், எஸ்.வி.தனசேகர், எஸ்.வி. பழனிவேல், எஸ்.வி. ராகவன், எஸ்.வி. செந்தில், திருக்கோயில் மேலாளர் ரவி, பேஸ்கார் கருப்பணன், காண்டிராக்டர் நேரு மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago