முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சிவாஜி கணேசன் இசை விழாவில் ரஜினிகாந்த பேச்சு

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.27 - தமிழ் திரை உலகின் முதல் நாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நஜினிகாந்த் கூறினார். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி, சந்திரபோஸ் தயாரிக்கும் படம் கும்கி இந்த படத்தை பிரபுசாலமன் இயக்கி உள்ளார்.  நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி லட்சுமிமேனன் இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இசைதட்டை ரஜினிகாந்த் முன்னிலையில் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.

விழாவில் இயக்குனர்கள் கெளதம் சசி, பி.வாசு, பாண்டிராஜ், சரவணன், லிங்குசாமி, கவிஞர் அறிவுமதி, யு.டி.வி தனஞ்செயன், நடிகர் சத்யராஜ் அம்மா சிவா இசையமைப்பாளர் இமான் படத்தின் நாயகன், நாயகி என பலர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் கமல்ஹாசன் கூறியதாவது:-

எங்கள் குடும்பத்தின் மூத்த நாயகன் நடிகர் திலகம் அவருக்கு இரண்டு புதல்வர்கள் என்றாலும் நானும் ஒரு மகன் தான் நடிகர் திலகம் இல்லாமல் இருந்தாலும் அவருடனான உறவு இன்றும் தொடர்கிறது. பிரபு மகன் விக்ரம் முதல் படியே அழுத்தமாக வைத்திருக்கிறார் என்றார்கள். அதை விட மேலே போய் மலை மீது அடி வைத்திருக்கிறார். அங்கே அருவி கொட்டுகிறது. எனக்கு சினிமா வினியோகம் பற்றி தெரியாது. ஆனால், மினிமம் கேரண்டி தெரியும். இதற்கு உதாரணம் சமீபத்தில் திரைக்கு வந்த கர்ணன் படம் உணர்த்தியது.

இந்த விழாவுக்கு நானும் ரஜினியும் வரவேண்டும் என்பது நியாயமான விருப்பம். ரஜினியும் ரொம்ப நியாயமான மனுஷன் வந்து விட்டார். எங்கள் வீட்டு செங்கல்லில் நடிகர் திலகத்தின் பெயர் உண்டு. என் வாழ்க்கையில் நான் செய்த பாக்யம், என் குரு நாதர் சிவாஜி இருக்கும் போதே சலாம் போட்டேன் அதுதான் நான் செய்த கெட்டிகாரத்தனம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தை நல்ல இடத்தை அடைய வேண்டும். விக்ரம் பிரபுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் இருக்கிறது. இவ்வாறு கமல் கூறினார்.

பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

அதிகம் விழாக்களுக்கு செல்வதில்லை. காரணம், எனக்கு மைண்ட் ப்ரியா இருக்கணும். சில நேரங்களில் அப்படி இருப்பதில்லை. அதனால்தான் விழாக்களை தவிர்க்கிறேன். தம்பி பிரபு நீங்களும், கமலும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்றார். நான் உடல் நிலை குறித்து யோசித்தேன். பிறகு போய் தீரவேண்டும் என்று மனசு கூறியது காரணம், தமிழ் திரை உலகின் முதல் நாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் வீட்டு விழா வந்துவிட்டேன். நான் சிங்கப்பூரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது கமல் சிங்கப்பூர் வந்திருந்தார். என்னை பார்க்க வேண்டும் என்று கூறியபோது மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை அப்போது சிங்கப்பூர் வந்து உங்களை பார்க்காமல் போவது கஷ்டமா இருக்கு என்றார். நான் சென்னை வந்ததும் பார்க்கிறேன். என்றேன். உங்கள் பிரார்த்தனையால் நலமடைந்தது. அந்த நிலையில் நான் இருந்த போது எண்ணி பார்க்கவே வெட்கமா இருக்கு, கூச்சமா இருக்கு நீங்க என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி கடன் பட்டுயிருக்கிறேன். மூளை மட்டும் வேலை செய்தால் போதாது, உடம்பும் வேலை செய்யனும், அப்போது தான் ஆரோக்கியமாக இருக்கும்.

நண்பர் கமல்ஹாசன் ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான பேர்ரி ஹாஸ் போன் என்பவருடன் இணைந்து படம் பண்ணுகிறார் என்கிற செய்தியை கேட்கும் போது தமிழ் சினிமாவுக்கு மட்டுமே பெருமை இல்லை இந்திய சினிமாவுக்கேபெருமை. இப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு நீ பயப்படுவதுதெரிகிறது. பயப்படு ஆனால் கவலைபடாதே. உங்க தாத்தா பெரிய சாதனை படைத்தவர். அவர் பெயரை காப்பாற்றுவது பெரிய விஷயம். இங்கே ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் வருஷத்திற்கு ஒரு படம் என்று முடிவு செய்யாதீர்கள். ஒரு படம் முடிஞ்சு அடுத்த படம். பண்ணும் போது டென்ஷன் இருக்கும் அதனால் ரெண்டு மூணு படங்கள் கைவசம் வச்சுகிங்க அதுதான் இண்டஸ்ட்ரீக்கும் நல்லது. நிச்சயம் கும்கி பேசப்படும் படமாக அமையும். இதில் உழைத்த அனைவரும் பேசப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் பிரபு மகன் விக்ரம் பிரபு முதன் முறையாக நாயகனாக நடித்திருக்கிறார் இந்த செய்தி அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைப்பேசி மூலம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவலை பிரபு நிருபர்களிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்