முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபியாவில் பொது இடங்களில் புகை பிடிக்கதடை

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

ரியாத். ஆக.- 2 - வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இன்ஜூரியஸ் டூ ஹெல்த் என்று எச்சரிக்கை அறிவிப்புக்கள் இருந்த போதிலும் உலகில் பரவலாக புகை பிடிக்கும் பழக்கம் மக்கள் இடையே இருந்து வருகிறது.  புகை பிடிப்பதால் மனிதர்களின் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்  ஏராளம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அடுத்து சில நாடுகளில் பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது வளை குடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவிலும் பொது இடங்களில் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா உள்துறை அமைச்சர் அகமதுல்லா அப்துல் ஷா இந்த தகவலை தெரிவித்தார். இந்த புதிய தடை உத்தரவின்படி அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் புகை பிடிக்க கூடாது. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவூதி அரேபிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்