முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் விஜேந்தர்சிங்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

லண்டன், ஆக. - 4 - லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா சார்பில் 7 வீரர்களும், ஒரே ஒரு வீராங்கனையுமான மேரிகோமும் பங்கேற்றனர். இதில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற விஜேந்தர்சிங்(மிடில் வெயிட் பிரிவு), தேவேந்திரசிங், ஜெயபகவான், மனோஜ்குமார் ஆகியோர் முதல் சுற்றில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர்.  விகாஸ் கிருஷ்ணன் யாதவ் நேரடியாக தகுதி பெற்றார். ஷிவாதாபா, சுமித் சங்வான் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோற்றனர். கால் இறுதிக்கு முந்தைய சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. மிடில் வெயிட் பிரிவில் விளையாடும் விஜேந்தர்சிங், இந்த சுற்றில் அமெரிக்க வீரர் டெரல்கவுசாவை எதிர்கொண்டார். இந்திய நேரப்படி 2.15 மணிக்கு இந்தப் போட்டி நடந்தது.  விஜேந்தர்சிங்குக்கு எல்லா வகையிலும் அமெரிக்க வீரர் சவாலாக இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. முதல் ரவுண்டில் விஜேந்தர்சிங் 4 - 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். ஆனால் 2 வது ரவுண்டு, 3 வது ரவுண்டில் இருவரும் சம பலத்துடன் விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 வது செட்டில் இருவரும் தலா 5 புள்ளிகளும், 3 வது செட்டில் தலா 7 புள்ளிகளும் எடுத்தனர். பரபரப்பான இந்த போட்டிகளில் விஜேந்தர்சிங் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.  அவர் கால் இறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்பாஸ் அதோவை 6 ம் தேதி சந்திக்கிறார். இதில் வெற்றி பெற்றால் விஜேந்தர்சிங்குக்கு பதக்கம் உறுதியாகி விடும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்