மத்திய அமைச்சரவையில் ராகுல்: பிரதமர் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 12 - காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் இணைவதை வரவேற்பதாக பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், அமைச்சரவையில் ராகுல் காந்தி இணைய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம். இப்பொழுதும் அவர் மத்திய அமைச்சரவையில் இணைவதை வரவேற்கிறோம் என்றார்.

மேலும் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான தவறான தகவல்கள் தொடர்ந்தும் வெளியிடப்பட்டு வருகிறது என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 6.5 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 5.5 விழுக்காடுதான் இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் அதனை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: