முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் மின் உற்பத்தி: கி.வீரமணி அறிக்கை

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.22 - கூடங்குளம் மின் உற்பத்தி முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டுமென்று  கேட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:-

தமிழ்நாட்டின் மின்தேவைக்கே மத்திய அரசு அளிக்க முன் வரவேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வரின்  வேண்டுகோள் மிக நியாயமான ஒன்றாகும்.

இதனை பல மாதங்களுக்கு முன்பே நாம் வரவேற்று எழுதியிருந்தோம். இப்போது முதல்வர் நமது பிரதமருக்கு மீண்டும் நினைவூட்டி மற்றொரு கடித வேண்டுகோளும் அனுப்பியுள்ளார்.  தமிழ்நாட்டை மின் தட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் காப்பாற்ற, இந்த உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று கேட்பது உரிமையின் அடிப்பையில் மட்டுமல்ல, நியாயத்தின் அடிப்படையிலும் தேவையான ஒன்றாகும்.

இதனை ஆதரித்து அத்துணைப்பேரும் அரசியல் மாச்சரியங்கள், கருத்து வேறுபாடுகளையும் கடந்து, தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுப் பிரச்சினையாக இதனை எண்ணி ஒரே குரலாகக் கொடுக்க வேண்டும். தி.மு.க.வின் தலைவர் இதனை ஏற்றுக் குரல் கொடுத்துள்ளதும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டின் நலனைப் பொறுத்த பொதுப் பிரச்சினைகள், காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை போன்றவற்றில் தமிழ்நாட்டிலுள்ள அத்துணை அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒரே அணியில் திரளத் தயங்கினாலும் ஒரே குரலே, சுருதி பேதமின்றி உரிமை முழக்கமாக எழுப்பக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இத்தகைய பொது நோக்கு பெருகட்டும், உரிமைகளை வற்புறுத்தி மக்களுக்கு, வாழ்வளித்திட அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் உறுதியேற்போமாக.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்