முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வுபெறும் நாள் இப்போதைக்கு இல்லை- டெண்டுல்கர்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், செப். - 1 - ஓய்வு பெறும் நாள் இப்போதைக்கு இல்லை என்று நட்சத்திர வீரர் டெண்டுல்கர் கூறினார். பெங்களூரில் 2011 ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறுகையில்,  தற்போது நான் உற்சாகத்துடன் பல போட்டிகளில் கலந்து கொள்கிறேன். எனவே ஓய்வு பற்றி நான் சிந்திக்கவே இல்லை. ஓய்வு பெற வேண்டுமானால் அதற்கு ஒரு காரணம் வேண்டும். அப்படி எந்த காரணமும் எனக்கு இல்லை. கிரிக்கெட் பேட் என் கையில் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. எனவே நான் ஓய்வு பெறும் நாள் இப்போதைக்கு இல்லை. ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போது நான் உங்களுக்கு சொல்வேன் என்றார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் பேசுகையில், 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற வேண்டும் என்பது என் ஆசை. இதுவரை நான் 97 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் எப்போதும் நான் பேட்டிங்கை தொடங்குவேன். அதுவே எனது சிறப்பான ஆட்டத்துக்கும், ஒரு நாள் ஆட்டத்தில் 219 ரன்கள் நான் எடுக்கவும் காரணமாக இருந்தது. சச்சின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சேவாக் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். இதுவே ஒரு நாள் ஆட்டத்தில் தனி ஒரு வீரரின் அதிகபட்ச ரன் ஆகும். சேவாக், கம்பீர் ஆகியோருக்கும் இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்