முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடன கலைஞர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.9 - நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் பிரச்சினையை பெப்ஸி பேசி தீர்த்து வைக்க வேண்டும் என்று நடன இயக்குநர்கள் சங்க தலைவர் ரகுராம் நேற்று நிருபர்களிடம் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

இயக்குனர்கள் சங்கம் கடந்த 1978 -ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் நடன கலைஞர்களும் மற்றும் நடன இயக்குனர்களும் என்ற இரு பிரிவினரும் இணைந்து இருந்தனர். காரணம் இதில் தொழில் கொடுப்பவர்கள் நடன இயக்குனர்கள், தொழில் செய்பவர்கள் நடன கலைஞர்கள். 1978 -ல் இருந்து 1990 வரை இருபிரிவினரும் ஒரு பாடல் காட்சிக்கு ஒப்பந்த ஊதியத்தின் அடிப்படையில் தொழில் புரிந்துகொண்டு இருந்தோம். 1991 -க்கு பிறகு நடன கலைஞர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் ஊதியம் பெற்று தருவதென்று அன்றைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதை நடன இயக்குனர்கள் முழுமனதோடு ஒப்புக்கொண்டு இன்று வரை கடை பிடித்து வருகிறார்கள். சில காலங்களில் நடன கலைஞர்கள் அதிகபடியாக வளர்ந்து 10000 -ம் பேரும், நடன இயக்குனர்கள் 180 பேரும் என்ற நிலையில் இன்று எங்கள் சங்கத்தில் உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன இயக்குனர்கள் தங்களின் ஜீவாதார உரிமையான தொழில் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு வேண்டிய மருத்துவ செலவு, குழந்தைகளுக்கு வேண்டிய கல்வி செலவு இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து நடன இயக்குனர்களும், தங்களுக்கு என்று ஒரு தனி குழுமம் அமைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை பலமுறை வைத்துள்ளனர். இவ்விஷயம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாக வெடித்து இதில் பொறுப்புடன் எப்.இ.எப்.எஸ்.ஐ. தலையிட்டு அப்போதைய எப்.இ.எப்.எஸ்.ஐ. இன் தலைவர் பெப்சி விஜயன் முன்னிலையில் இனி வரும் காலங்களில் தலைவர், உப தலைவர் மற்றும் துணை செயலாளர் பதவியில் நடன இயக்குனர்களே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

இப்போதும் பெப்ஸியின் சட்ட திட்டங்களை பின் பற்றி வருகிறோம். எங்கள் நிலைபாட்டை பெப்சிவிற்கு அனுப்பினோம். இதை கண்ட அந்த சங்கம், இவிஷயத்தை உண்மைக்கு புறம்பாக மாற்றி எங்கள் மீது பல பழி சொற்களை கூறி நடன கலைஞர்களிடம் எங்களை பிளவுபடுத்தி மற்றும் பெப்சியிடமும் தவறான தகவல்களை கூறினார்கள். நடன கலைஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் மேலும் நடன இயக்குனர்களை அவமான படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ரகுராம், ஸ்விங்முரளி, பாபு, கந்தாஸ், ரவிதேவ் நிர்மல் சீனிவாசன் என பலரின் புகை படத்தை அச்சிட்டு அனைத்து சங்கங்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர். இவ்விஷயம் மூத்த நடன இயக்குனர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது.

எங்கள் சங்கத்தின் விதிமுறை படி விதி எண்.15 -ன் கீழ் ஒருவர் மீது தொழில் ஒத்துழையாமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அவரை கடிதம் மூலம் பேரவைக்கு அழைத்து, தன்னிலை விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு அளித்து பேரவையின் ஒப்புதல் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நடைமுறை. இது கடைபிடிக்கபடவில்லை. இது பற்றி விவாதிக்க பெப்சி பேரவை கூடுகிறது என்று அறிந்து நாங்களும் அதில் கலந்து கொண்டு உங்கள் அனைவருக்கும் எங்கள் தன்னிலை விளக்கம் அளிக்க கடந்த 21.8.2012 அன்று கடிதம் மூலம் எப்.இ.எப்.எஸ். க்கு தெரிவித்தும் கூட எப்.இ.எப்.எஸ். எங்களில் யாவரையும் பேரவைக்கு அழைக்காமல் அந்த சங்கத்தின் வார்த்தைகளை நம்பி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களும் ஒத்துழைத்து, அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் மூலம் தொழில் ஒத்துழையாமை என்று அறிவித்து உள்ளனர். இதுவரை அழைத்து என்னவென்று விசாரிக்காமல் பலமுறை நாங்கள் பெப்சிக்கும் எங்கள் சங்கத்திற்கும் கடிதம் அனுப்பியும், எங்கள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை மன வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். எங்கள் சங்கம் இது வரை எங்களை கடிதம் மூலமாக அழைத்து ஒருமுறை கூட பேசவில்லை.

இந்த நிலை நீடிக்காமல் நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் பிரச்சினையை பெப்சி அழைத்து பேசி தீர்க்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நல வாரியத்திடம் புகார் தெரிவித்தும் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony