முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோலிய துறை அதிகாரிமீது வழக்குபதிவு செய்ய கோர்ட்டுஉத்தரவு

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. செப். - 12 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெட்ரோலியத்துறை அதிகாரி உதய் சங்கர் மீது வழக்கு பதிவு செய்யும்படி டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தில் கலப்பட தடுப்பு குழு பிரிவில் இணை  இயக்குனராக இருப்பவர்  உதய் சங்கள். இவர் இப்போது  இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் பெட்ரோலியம் டீலர்களிடம் கலப்படத்தை கண்டு கொள்ளாமல் இருக்க  லஞ்சம் பெற்றதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து இவர் பணி இடை நீக்கம் ( சஸ்பெண்டு ) செய்யப்பட்டுள்ளார். இந்த புகாரின் பேரில்  இவர் மீது  வருமானத்திற்கு  அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டி  வழக்கு பதிவு செய்யுமாறு  டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராகேஷ் சியால்  உத்தரவு பிறப்பித்துள்ளார். உதய்  சங்களும்  அவரது  குடும்பத்தினரும் தங்களது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அதிகமாக  ரூ. 1.11 கோடிக்கு  சொத்து  சேர்த்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. என்வே இவரும் இவரது  குடும்பத்தினரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்த்ததற்கான  முகாந்திரம் உள்ளது என்றும் எனவே அவர் மீது  வழக்கு பதிவு செய்யலாம் என்றும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி  தனது உத்தரவில்  கூறியுள்ளார். அரசு  ஊழியராக இருந்து கொண்டு  இவர்  இந்த தவற்றை செய்துள்ளது ஒரு கிரிமினல் குற்றமாகும் என்றும் எனவே அவர் மீதும் அவது  கூட்டாளியான சஞ்சீவ் குமார் மீதும் வழக்கு பதிவு செய்ய  வேண்டும் என்றும் நீதிபதி  தனது உத்தரவில்  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்