முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து,லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதுதாக்குதல் அதிகாரி பலியானார்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

கெய்ரோ,செப்.- 13 - எகிப்து, லிபியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்கினர். இதில் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் பலியானார். இஸ்லாம் மததத்தை குறை கூறி ஆங்கில படம் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எகிப்து நாட்டில் உள்ள ஒரு பிரிவினர் அமெரிக்க தூதரகத்தை தாக்கினர். இதில் அலுவலகம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவம் நடந்த பல மணி நேரம் கழித்து லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் தாக்கப்பட்டது. லிபியாவில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான பெங்கஜியில் உள்ள அமெரிக்க துணைதூதரகம் மீது வன்முறையாளர்கள் தாக்கினர். கும்பலில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் தூதரகத்திற்குள் இருந்த அதிகாரி ஒருவர் பலியானார். இந்த தாக்குதலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் உறுதி செய்துள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட அதிகாரி குடும்பத்தினர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார். இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தூதரகத்தில் பணிபுரிந்தவர்களை பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஹில்லாரி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்