முக்கிய செய்திகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- ஏ.கே. அந்தோணி

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
ak-antony

கொச்சி,ஏப்.- 8 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் அரசியல் தலையீட்டை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் தப்ப முடியாது என்று கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ.யின் முழு அறிக்கை வெளியாகும். அப்போது உண்மை என்ன என்பது தெரியும் என்று கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அந்தோணி மேலும் கூறினார். 2 ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்கமிட்டியும் பாராளுமன்ற பொது கணக்குக்குழுவும் விசாரணை செய்து வருகிறது. அதன் அறிக்கைகளும் வரட்டும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தோணி மீண்டும் கூறினார். ஆதர்ஸ் சொசைட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல் காரணமாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினமா செய்ய மாட்டேன் என்ற நிருபர்களின் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தோணி கூறினார். ஊழல் விஷயத்தில் காங்கிரஸ் கண்ணாம் பூச்சி விளையாட்டு விளையாடு என்றும் அந்தோணி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: