முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.கவை விட்டு விலகும் காலம் வந்துவிட்டது: எடியூரப்பா

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

பெங்களூர், செப். - 30 - பா.ஜ.க.வை விட்டு விலகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது இதுவே முதல் முறை. இது குறித்து கட்சியின் தேசிய தலைவர் கட்காரிக்கு விளக்கமாக கடிதம் எழுதுவேன். கர்நாடக மாநில பா.ஜ.க தலைவவ் பதவியை பெற நான் பின்வாசல் வழியாக முயற்சிப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. கட்காரியே கொடுத்தாலும் அந்த பதவி இனி எனக்கு தேவையில்லை. எனது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பா.ஜ.க தேசிய பொது செயலாளர் அனந்த்குமார் குழப்பம் ஏற்படுத்தி வருகிறார். அவரது பரிந்துரையின்படி பிரஹலாத் ஜோஷியை மாநில தலைவராக்குவதற்கு பதில் அந்த பதவியை அவருக்கே தரலாம். கட்சி தலைவராகி முதல்வராக வேண்டும் என்று அனந்த்குமார் கனவு காண்கிறார். 40 ஆண்டுகள் கடினமாக உழைத்து முதல்வர் பதவியை அடைந்திருக்கிறேன். இதை கட்காரி புரிந்து கொள்ள வேண்டும். என்னை ஓரங்கட்டுவதற்காக பா.ஜ.க.வில் முதல் முறையாக 2 துணை முதல்வர்கள் மரபு அறிமுகமாகி உள்ளது. தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தனக்கு தெரியும் என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார். வாய்ப்பு கேட்டு யாரும் ஈஸ்வரப்பா வீட்டு கேட்டில் நிற்க மாட்டார்கள். அக்டோபர் 5 ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்தறிந்து எனது அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்வேன். மக்கள் விரும்பினால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டால் பா.ஜ.க.வில் இருந்து விலகுவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதற்கான நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்