முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக சாத்தூர் ராமச்சந்திரன் மீது புகார்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி., ஏப்.- 11  - வேட்பாளர் சீட்டு வாங்கித் தருவதாக கூறி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக தி.மு.க. செயலாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.

வத்றாயிருப்பு அருகில் உள்ளது கூமாபட்டி. இங்கு தி.மு.க. செயலாளராக இருப்பவர் கோஸ். இவர் கடந்த 7 ம் தேதி கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு வேட்பாளர் சீட்டு வாங்கித்தருகிறேன் என்று கூறி ரூ. 25 லட்சம் வாங்கிக்கொண்டதாகவும், சீட்டு கிடைக்காததால் மீண்டும் அந்த பணத்தை திருப்பி கேட்டபோது, அடியாட்களை வைத்து மிரட்டியதாகவும் கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னை அரசியலை விட்டு வெளியேற்ற எந்தவிதமான தேர்தல் பணியையும் என்னிடம் தரவில்லை. இதனைத் தி.மு.க. தலைமையின் கவனத்திற்கு கொண்டுசெல்ல உண்ணாவிரதம் இருக்க போலீசாரிடம் அனுமதி கேட்டேன். ஆனால் போலீசார் மறுத்துவிட்டனர். அதையும் மீறி ராமசாமியாபுரம் முக்கு ரோட்டில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க கோஸ் முயன்றுள்ளார். தகவலறிந்த வத்றாயிருப்பு இன்ஸ்பெக்டர் நாகராஜன், கோஸை கைது செய்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.

சாத்தூர் ராமச்சந்திரன் ரூ. 25 லட்சம் மோசடி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony