முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்சா மர்ம மரணம் - திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - சாதிக்பாட்சா மர்ம மரணம் விவகாரத்தில் சி.பி.ஐ. தடயவியல் துறை தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் 3 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் சாதிக்பாட்சா  மரணம் பற்றி திடுக்கிடும் தகவல்களை சி.பி.ஐ. திரட்டி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு ஊழல் குறித்து சென்னை கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாதிக்பாட் சாவிடமும் சி.பி.ஐ. அதி காரிகள் விசாரித்து வந்தனர். சாதிக்பாட்சாவுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான பல்வாவின் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 16​ந் தேதி சாதிக்பாட்சாவை டெல்லிக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீசு அனுப்பி இருந்தனர். 

ஆனால் அன்று சாதிக்பாட்சா சென்னை தேனாம் பேட்டையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். சாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதில் உண்மையை கண்டறிய சி.பி.ஐ. அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் மத்திய தடயவியல் நிபுணர் குழுவினர் சாதிக் பாட்சாவின் சென்னை வீட்டில் சோதனை நடத்தி ஆய்வு செய்தனர். அதே சமயத்தில் திருச்சி, பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்சாவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. சாதிக்பாட்சா மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பதற்கான ஆதா ரங்களை தேடி கண்டு பிடிக்கும் வகையில் அந்த ஆய்வு இருந்தது. சாதிக் பாட்சா தற்கொலை செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிய அம்சங்கள் எவை, எவை என்றும் ஆராயப்பட்டது. சாதிக்பாட்சாவை யாராவது மிரட்டி தற்கொலைக்கு தூண்டினார் களா என்றும் விசாரிக்கப்பட்டது. சாதிக் பாட்சா தூக்கு போட்ட அறையை உடைத்து திறந்ததாக அவரது மனைவி கூறி இருந்தார். ஆனால் உண்மையில் அந்த அறை கதவு உடைக்கப்படவில்லை என்பதை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அது போல சாதிக்பாட்சா மரணம் அடைந்த தினத்துக்கு முன்தின நாள் இரவு ஒரு நபரிடம் 30 தடவைக்கும் மேல் பேசியுள்ளார். அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. சாதிக்பாட்சா தற்கொலை குறித்து அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள் பலர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அந்த வாக்குமூல தகவல்கள் உண்மை தானா என்று தடயவியல் நிபுணர்கள் உண்மை கண்டறியும் சோதனை மூலம் ஆய்வு செய்தனர். சாதிக்பாட்சா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மத்திய தடயவியல் துறை மனநல நிபுணர்கள் முதல்தடவையாக அதிநவீன கருவிகளை பயன்படுத்தி விசாரணை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நவீன ஆய்வு மூலம் எத்தகைய தகவல்கள் கிடைத்தன என்பதற்கு அதிகாரிகள் பதில் சொல்ல மறுத்து விட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் மற்றும் அறிவியல் nullர்வமாக நடந்துள்ள ஆய்வுகள், சி.பி.ஐ. சோதனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony