முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் அதிகாரியை தாக்கிய பகுஜன் கட்சி பிரமுகர்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

அம்பேத்கார் நகர், ஏப்.13 - உத்தரபிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை தாக்கிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அகமது நகரில் உள்ள பீத்தி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி அனில் மிஸ்ரா. இவர் போனிபூர் கிராமத்தில் இரு கோஷ்டியினர் இடையே ஏற்பட்ட நிலத்தகராறை தீர்ப்பதற்காக சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் உள்ளூர் தலைவர் சுரேஷும் அவரது  உதவியாளர்களும் அந்த போலீஸ் அதிகாரி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரி மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷையும் அவரது உதவியாளர்கள் 10 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony