பெண்களின் வாக்கு மீண்டும் ஒபாமாவுக்கு கிடைக்குமா?

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நவ. - 5 - அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடந்த தேர்தலைப் போல இம்முறை ஒபாமாவுக்கு பெண்கள் வாக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. 2008 ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது பெண்கள் வாக்கு ஒபாமாவுக்கு அதிகமாகக் கிடைத்ததால் வெற்றி பெற முடிந்தது. ஒபாமாவுடன் ராம்னி நடத்திய முதல் நேருக்கு நேர் விவாதத்தின் போது ராம்னிக்கே பெண்கள் ஆதரவு அதிகமாக இருந்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் ஒபாமா தரப்பு இதை நிராகரிக்கிறது. இம்முறையும் ஒபாமாவின் வெற்றிக்கு பெண்களின் வாக்குகளே முதன்மையான காரணமாக இருக்கும் என்கின்றனர். கல்வி, சுகாதாரம், சமமான ஊதியம் போன்றவற்றை ஒபாமா நிர்வாகம் செய்திருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களின் வாதம். செப்டம்பர் மாத இறுதியில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கூட ஒபாமாவுக்கே பெண்கள் வாக்கு அதிகமாக கிடைத்திருந்தது என்பதையும் அவரது தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் ராம்னி ஒவ்வொரு முறையு பெண்கள் விஷயங்களில் நிலையான கொள்கை முடிவு இல்லாமல் மாறி மாறி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: