51 வயதாகும் அதிபர்ஒபாமா உலகஅளவில் வெற்றி பெற்றுள்ளார்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,நவ.- 8 - அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ள ஒபாமா உலக அளவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஒபாமா பல்வேறு தடைகளை தகர்த்தெரிந்து அமோக வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் கறுப்பனர் இனத்தை சேர்ந்த ஒருவர் உலக அளவில் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அனைவரையும் ஒருங்கிணைப்பதிலும் பேச்சிலும் மிகவும் கெட்டிக்காரர் என்றார் அது மிகையாகாது. அதேசமயத்தில் அமெரிக்கா உள்பட உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சமாளித்து வளர்ச்சி அடைய செய்வதில் அவருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. இந்திய விவகாரத்தில் அவர் மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடன் அவருக்கு நெருக்கமான உறவு இருந்தபோதிலும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வேலை கொடுப்பதை எதிர்த்து வந்தார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த கொள்கையை அவர் கடைப்பிடித்தார். இது இந்தியர்களிடையே குறிப்பாக பொறியாளர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் அவர் இந்தியாவுக்கு முதன் முதலாக வந்தபோது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கொடுக்க ஆதரவு தெரிவித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை கையாளுவதில் ஒபாமா கையாண்ட விதத்திற்கு அந்த நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் நடந்த அதிபர் தேர்தலில் அதிகப்பட்ச பேர் ஒபாமாவுக்கே வாக்களித்து வெற்றிபெறச்செய்துள்ளனர். பசிபிக்-ஆசிய நாடுகள் சம்பந்தமாக ஒபாமா கடைப்பிடித்து வந்த கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவார் என்று தெரிகிறது. அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டத்தையும் ஒபாமா சமாளிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மட்டுமல்லாது உலக அளவில் பரவி வரும் தீவிரவாதத்தை சமாளித்து ஒடுக்குவதில் ஒபாமாவுக்கு பெரும் சவாள் எதிர்நோக்கியுள்ளது. உலக அளவில் சீனா பெரும் வல்லரசு நாடாக வளர்ந்து வருவதோடு பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக போட்டியிலும் ஈடுபட்டுள்ளது. இதையும் சமாளித்து அமெரிக்காவை வர்த்தகத்தில் உலகிலேயே முன்னணி நாடாக கொண்டுவரும் பொறுப்பும் ஒபாமாவுக்கு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: