முக்கிய செய்திகள்

மேலூரில் தி.மு.க.வினர் அராஜகம்

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
melur11

 

மேலூர்,ஏப்.14 - மேலூர் அருகே எட்டிமங்கலத்தில் தி.மு.க.வினர் வாக்கு சாவடிக்குள் நுழைந்து வாக்கு சேகரித்தனர். அதை தடுத்த அ.தி.மு.க.வினர் மீதும் அரசு ஊழியர்கள் மீதும் கலவரத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் போலீசார் அ.தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மதுரை மாவட்ட துணை எஸ்.பி.மணிவாசகம் தலைமையில் மேலூர் டி.எஸ்.பி.மணிவண்ணன், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதனம் செய்தனர். கலவரத்தில் தாக்கப்பட்டு காயமடைந்ததாக தி.முக.வை சேர்ந்த மலைச்சாமி 108 ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் மேலூர் அருகே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்: