முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ ஆட்சியாளர்களுடன் இந்தியாவின் நெருக்கம் ஆங் சான் சூச்சி அதிருப்தி

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

யாங்கூன், டிச. - 17:- மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களுடன் இந்தியா நெருக்கமாக இருந்தது ஏமாற்றமளிக்கிறது என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக மியான்மருக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குரிஷித், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயக இயக்கப் போராளியுமான ஆங் சான் சூச்சியை சனிக்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடம் நீடித்தது. அதன் பின் ஆங் சான் சூச்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ாமியான்மரில் இப்போது அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. (ராணுவ ஆட்சியிலிருந்து, ஜனநாயக அரசாக மாறி வரும் நிலையையே அவர் சுட்டிக்காட்டினார்.) இந்த மாற்றத்தை இந்தியா நேரடியாக பார்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். எங்களுக்கான தேவையை மதிப்பிட வேண்டும். மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு இந்தியா நெருக்கமாக இருந்ததால், அந்நாட்டின் மீதான நம்பிக்கையை நான் இழந்து விட வில்லை. உங்கள் நண்பர்கள் மீது அன்பு இருந்தால், அவர்கள் சில சமயம் வழி தவறிப் போகும் போதும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்ா என்றார் ஆங் சான் சூச்சி. முன்னதாக கடந்த மாதம் இந்தியா வந்திருந்த ஆங் சான் சூச்சி, ா(ராணுவ ஆட்சி நிலவிய) கடினமான காலங்களில், இந்தியா எங்களுடன் (மியான்மர் மக்களுடன்) இல்லை என்பது வருத்தமளிக்கிறது. எனினும், ஜனநாயகத்தை மலரச் செய்வதில் இந்தியா இனிமேலாவது உதவும் என நம்புகிறேன் ா என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்