முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுகளை மனிதர் அள்ளும் தடை சட்டம்: சு.,கோர்ட் கண்டனம்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 10 - கழிவுகளை மனிதர் அள்ளுவதை தடை செய்யும் சட்டத்தை இயற்ற தவறியதற்காக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எச்.எல். தத்து, சி.கே. பிரசாத் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனித கழிவுகளை மனிதர் அகற்றுவது மற்றும் சாக்கடை கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தடை செய்யும் சட்டம் விரைவில் இயற்றப்படும் என பலமுறை உறுதியளிக்கப்பட்டும் இதுவரை அதை செயல்படுத்தாததற்காக மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், நிலைக்குழு கூட்டம் 2 வது முறையாக 11 ம் தேதி கூடுகிறது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நிலைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கும் எனஅறார். இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. மனிதர்கள் கழிவுகளை அள்ளுவதை 2 மாதத்தில் தடுக்காவிட்டால் அரசின் உயரதிகாரத்தில் இருப்பவர்களில் ஒருவரை நேரில் ஆஜராக உத்தரவிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்