தென்னிந்திய திரைப்பட விருது விழா: கதார் நாட்டில் நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.6 - தென்னிந்திய பிலிம் ஃபேடர் நிட்டி விருது  வழங்கும் விழா தோகா கதார் நாட்டில் நடக்கவிருக்கிறது.  இந்த விழா வருகிற ஏப்ரல் மாதம் 19-ம் தேதி மாலையில் நடைபெறுகிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்கள் கலந்து கொள்கிறது. குறிப்பாக கடந்த  2012-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்கள் இதில் பங்கேற்க உள்ளன. இதில் சிறந்த தயாரிப்பாளர், டைரக்டர்,  நடிகர், நடிகை, பாடகர், பாடகி, காமெடியன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பெண் காமெடி நடிகை ஆகியோர்களை தேர்வு செய்து விருது வழங்க உள்ளனர். நிகழ்ச்சி ஏ.ஜி.விஷன் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

 படங்களை தேர்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. தமிழ் படங்களை போல மற்ற தென்னிந்திய மொழி படங்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளன. கதார் நாட்டிலுள்ள நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் இவ்விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தென்னிந்திய முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: