எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,பிப்.- 11 - பொட்டுசுரேஷ் கொலையாளிகளின் போலீஸ்காவல் முடிந்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பருமான பொட்டுசுரேஷ் கடந்த மாதம் 31ம் தேதி 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நத்தம் கோர்ட்டில் சரண் அடைந்த மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், ராசா முருகன், லிங்கம், சேகர், கார்த்திக்,செந்தில் ஆகிய 7 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 6 நாட்கள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்து வரும் போலீசாருக்கு முழுமையான தகவல்கள் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. முன்னுக்குப்பின் முரணாகவே அவர்கள் பதில் அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொலையாளிகளின் செல்போனை சோதித்ததில் திமுக பிரமுகர்கள் சிலரின் எண்கள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக மேலும் 3 பேர் சிக்கி உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 7 பேரின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிகிறது. எனவே அவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். இதன் பின் மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுப்பப்படுவார்களா, அல்லது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்களா என்பது தெரியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


