முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சார்பில் கருணாநிதி மீது மீண்டும் அவதூறு வழக்கு

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, பிப். 12 - முதல்வர் ஜெயலலிதா சார்பில் கருணாநிதி மீது மீண்டும் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முதல்​ அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல். ஜெகன்தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:​

இந்து ஆங்கில பத்திரிகையில் 31.1.2013 அன்று கமலஹாசன் மீது ஜெயலலிதாவுக்கு விரோதம் என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிக்கை செய்தியாக வெளியாகி இருந்தது.

அதில் விஸ்வரூபம் படத்தின் சேட்டிலைட் உரிமம் வழங்காததாலும், வேட்டி கட்டிய தமிழன் அடுத்த பிரதமராக வருவார் என்று ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் கமலஹாசன் பேசியதாலும் ஜெயலலிதாவுக்கு கமலஹாசன் மீது விரோதம் ஏற்பட்டது. இதனால் விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது என்று செய்தி வெளியாகி இருந்தது. 

இந்த செய்தியால் தமிழக முதல்​ அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து பத்திரிகை ஆசிரியர், வெளியிட்டாளர் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்