முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுகோடா வெளிநாடுகளில் ரூ.3,500 கோடி பதுக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.18  - ஜார்க்கண்ட் மாநில முதல்வர் மதுகோடா தனது இரண்டாண்டு கால பதவியில் அரசு பணத்தை அளவில்லாமல் சுருட்டியதை அமுலாக்கப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள அமுலாக்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அமுலாக்கப்பிரிவு மூத்த அதிகாரி அருண்குமார் தலைமையில் ஒரு குழுவினர் மதுகோடாவின் நெருங்கிய உதவியாளர் அணில்பஸ்தாவை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர் கடந்த மாதம் தாய்லாந்தில் சிக்கினார். அவரை  அதிகாரிகள் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் அன்னிய செலாவணி மோசடி மூலம் ஜார்க்கண்ட் மாநில பணம் தாய்லாந்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணத்தின் மூலம் தாய்லாந்தில் 4 தீவுகளை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து சில நிறுவனங்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். துபாயில் 9 சொகுசு பங்களாக்களை மதுகோடா வாங்கி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.222 கோடியாகும். மதுகோடாவின் 2 ஆண்டுகால ஆட்சியில் ரூ.3 ஆயிரத்து 536 கோடி அளவுக்கு வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுரங்கத்தொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அதிகாரிகள் குழு லைப்பீரியா சென்று விசாரணை நடத்தினர். அங்கு கிடைத்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அடுத்தமாதம் ஸ்வீடன் செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஸ்வீடன் நாட்டில் மதுகோடாவால் ஏகப்பட்ட பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.லைப்பீரியாவிலும் ஸ்வீடனிலும் இன்னும் ஆயிரக்கணக்கானகோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்