வக்கீல் சாந்திபூஷன் உரையாடல் சி.டி. உண்மையானது

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      ஊழல்
Lokpal

 

புது டெல்லி,ஏப்.22 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குழுவில் பிரபல வக்கீல்கள் சாந்திபூஷன் அவரது மகன் பிரசாந்த் பூஷன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஆனால் சாந்திபூஷன், பிரசாந்த் பூஷன் இருவருமே ஊழல்வாதிகள். அவர்களை எப்படி இந்த குழுவில் சேர்க்கலாம் என எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சாந்திபூஷன் தொடர்பான ஆடியோ சி.டி. ஒன்று வெளியானது. அதில் சாந்தி பூஷன் உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங்குடன் ஒரு வழக்கு பற்றி பேசினார். முலாயம்சிங் மீதான இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்றால் நீதிபதிக்கு ரூ. 3 கோடி லஞ்சம் வழங்க வேண்டும் என்று அவர் பேசியிருந்தார். 

இந்த சி.டி. உண்மையானது அல்ல. மிமிக்ரி குரல் மூலம் சி.டி.யை போலியாக தயாரித்து இருக்கிறார்கள் என்று சாந்திபூஷன் கூறினார். டெல்லி போலீசார் இந்த சி.டி.யை கைப்பற்றி தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனை முடிந்து தடயவியல் நிபுணர்கள் இதன் அறிக்கையை போலீசாரிடம் வழங்கினார்கள். இந்த சி.டி. உண்மையானதுதான் என்று அறிக்கையில் தடயவியல் நிபுணர்கள் கூறி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் லோக்பால் குழுவில் சாந்திபூஷன், பிரசாந்த்பூஷன் ஆகியோர் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: