முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதின மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை

புதன்கிழமை, 6 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச் 7 - மதுரை ஆதினமடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து மதுரை ஜகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை 292-வது ஆதினமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார்.293-வது இளைய கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். இளைய  ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா நீக்கப்பட்டார்.முன்னதாக அவர்கள் மதுரை ஆதினம் அறக்கட்டளை ஒன்றை தொடங்கினர்.இந்த நிலையில் நித்தியானந்தா நீக்கதால் அறக்கட்டளை சார்பில் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா தலையிடவோ,ஆதீனமடத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறி மதுரை ஆதீனம் சார்பில் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு நித்தியானந்தா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஆதீன அறக்கட்டளையில் தான்(நித்தியானந்தா)இருப்பதால் மதுரை ஆதீன மடத்துக்குள் செல்லவும்,அங்கு பூஜைகள் நடத்த தனக்கு உரிமை உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதன்மை சார்பு நீதிபதி குருவையா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கு நிலுவையில் இருக்கும் வரை நித்தியானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22-ந்தேதி தள்ளி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்