முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி முன்னாள் பிரதமருக்கு ஓராண்டு சிறை

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

ரோம், மார்ச். - 9 - காவல் துறை தொடர்பான ரகசிய ஆவணங்களை பத்திரிகையில் வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சில்வியோ பெர்லஸ்கோனி தனக்கு சொந்தமான இல்கியோர்னேல் நாளிதழில் காவல் துறை வைத்திருந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். பி.என்.எல். வங்கியை யுனிபோல் காப்பீட்டு நிறுவனம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தது. 2006 ம் ஆண்டு தேர்தலையொட்டி ஜனநாயக கட்சியொன்றின் தலைவருக்கு இழுக்கை ஏற்படுத்துவதற்காக இந்த ஆவணங்களை அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது.  இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற  வழக்கில் பெர்லஸ் கோனிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் அவர் சிறை செல்லத் தேவையில்லை. அந்நாட்டு சட்டத்தின்படி 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை பெற்றிருந்தால் சிறைக்கு செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது 76 வயதாகும் பெர்லஸ்கோனி தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. இதே வழக்கில் மற்றொரு குற்றவாளியான இல்கியோர்னேல் நாளிதழின் ஆசிரியரும், பெர்லஸ்கோனியின் சகோதரருமான பாலோவுக்கு 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில்வியோ பெர்லஸ்கோனி மீதான மேலும் இரு வழக்குகள் தொடர்பான தீர்ப்புகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகவுள்ளது. 17 வயது பெண்ணுடன் உறவு கொண்ட வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 18 ம் தேதியும், வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 23 ம் தேதியும் வெளியாகும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்